Saturday, 22 October 2016

5. மனுஷன் எனக்கு என்ன செய்வான்

5. மனுஷன் எனக்கு என்ன செய்வான்

          கருங்கல்பட்டி கிராமத்திற்கு அந்த மூதாட்டி வந்து சேர்ந்தது தெய்வச் செயல்.

         தேனம்மா பாட்டியைத் தெரியாதவர்கள் அந்த ஊரில் இப்பொழுது யாரும் கிடையாது. ஒருமுறை அந்த ஊருக்கு பாட்டி வந்திருந்தாள். அங்கு நடந்த ஆராதனை ஒழுங்குகள், வீடுகளில் உள்ள ஜெபதபங்கள், பாட்டு படிப்புகள் பாட்டியைக் கவர்ந்தன.

          கோயில் பக்கத்தில் ஒரு வீடு காலியாக இருந்தது. அந்த வீட்டுக்காரர் மதுரையில் இருந்தார். வாடகைக்குக் கேட்டுக் கடிதம் எழுதினார். அவர்கள், வீட்டில் விளக்கு எரிந்தால் போதும் என்று சொல்லி வாடகை இல்லாமல் கொடுத்து விட்டார்கள் . அவ்வீட்டிலிருந்து வேத வெளிச்சம் பிரகாசித்தது. பலரும் பாட்டி வீட்டிற்கு வந்து ஜெபித்தார்கள்.

          அந்த அம்மாவிற்கு இரு பையன்கள் மட்டுமே, இருவரும் கொழும்பில் இருந்தார்கள். ஒருவன் விடுதாலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்து விட்டதாகக் கேள்வி, அடுத்தவன் எப்போதாவது அம்மாவிற்குப் பணம் அனுப்புவான். அவனைச் சிலர் சிலோனில் கண்டியின் பக்கம் கண்டதாகக் கேள்வி, அவ்வளவு தான். இப்பொழுது துப்பு ஏதும் இல்லை.

          தேனம்மா பாட்டி எப்போதும் ஜெபிப்பார்கள். மற்றக் குடும்பங்களிலுள்ள பிரச்சினைகளுக்காக மிகுந்த பாரத்தோடு ஜெபித்து ஜெயம் காண்பார்கள்.

        அந்தப் பாட்டி ஊரார் பிள்ளைகளை ஊட்டி வள்ர்து தன் பிள்ளைகளைக் கவனியாமல் விட்டு விட்டார்கள், பாட்டி மேல் உள்ள ஒரே குறைபாடு அது தான்.

          ஆண்டவர் அந்த அம்மாவை ஆச்சரியமாகப் போஷித்து வந்தார். அன்றோரு நாள் இரவு ஆகாரம் இல்லை. மாலை மணி 5 ம், 6 ம்  ஆயிற்று. ஆண்டவரே இன்றைய ஆகாரத்தை தாரும் என்று வாய் விட்டு ஜெபித்தார்கள். ஜன்னலைத் திறந்து வைத்துக்கொண்டு சத்தமாய்ப் பாடிக்கொண்டும், ஜெபித்துக் கொண்டும் இருந்தார்கள்.

          ஜன்னல் வழியாகச் சென்று கொண்டிருந்த இரு கல்லூரி வால்கள் அதைக் கேட்டு, பாட்டியைப் பரிகாசம் பண்ண எண்ணினார்கள். நேரே கடைக்குப் போய் சட்டினியோடு கூடிய நான்கு உழுந்த வடைகளை  வாங்கி ஜன்னல் பக்கம் தெரியாமல் வைத்து விட்டுப் போய் விட்டார்கள்.
பாட்டி கண் திறந்து பார்த்தபோதுஒரு பார்சல் இருந்தது. திறந்து பார்த்தார்கள். ஆண்டவருக்கு நன்றி சொல்லி சாப்பிட்டார்கள். அந்த வடைகள் இரவு உணவிற்குப் போதுமானதாய் இருந்தது.
மீண்டும் அந்தக் கல்லூரி வாலிபர்கள் அவ்வழியே வந்து பாட்டியிடம் வினவினார்கள்.

         ‘என் ஆண்டவர் இன்று தம் தூதன் மூலமாக என்னைப் போஷித்தார் என்று பாட்டி சொன்னதும் தம்பிமார் இருவரும் பரிகாசத்தோடு சிரித்தார்கள்.

         ‘பாட்டி நாங்கள்தான் சோதிக்கும்படி வடைகளை வைத்து சென்றோம். தூதனும் அல்ல கீதனும் அல்ல என்று சொல்லி கை கொட்டிக் கிண்டல் செய்தார்கள்.

          அப்பொழுது மூதாட்டியான் தாயார் சொன்னார்கள்:
என் அருமையான் பேரப் பிள்ளைகளே, நீங்கள் இதுவரை யாருக்காவது இப்படி நன்மை ஏதும் செய்தது இல்லை. இது நீங்களாவது செய்த நற்கிரியை அல்ல. நான் வேண்டிக் கொண்ட ஆண்டவர் உங்கள் இருதயத்தை ஏவினார். நீங்கள் தேவதூதனாகப் பயன்பட்டீர்கள். அவருடைய பரிசுத்த நாமத்திற்கு நன்றி என்று சொல்லி கை தட்டி, ‘தோத்திரம் ஏசு நாதா என்று பாடினார்கள்.
          
      தம்பிமார்கள் வெட்கிச் சொன்றார்கள்.

தேவனை நம்பி இருக்கிறேன், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்? (சங்கீதம் 56: 11)

0 comments:

Post a Comment