Thursday, 8 September 2016

Sunday School Songs

                                              Sunday School Songs


பாடல் 1

சூசான் அரண்மனையில சூழ்ச்சிகளின் மத்தியில
எஸ்தர் அக்கா வந்து சேர்ந்தாள்
அப்பா அம்மா யாருமில்ல, ஆனா தேவன் கைவிடல
அரண்மனை அழைத்து வந்தார்
மொர்தெகாயின் போதனையை
ரொம்ப நல்ல யோசனையா ஒழுங்கா கடைபிடிச்சா
பெத்தவங்க பெரியவங்க புத்தி சொன்னா கேக்கனுங்க
சத்தியமா நன்மை உண்டுங்க
அகாஸ்வெரு மனசுல ஆண்டவரின் கிருபையால
அரசியா இடம் பிடிச்சா – 2


பாடல் 2

யோசுவாவின் கட்டளைஅது யோசுவாவின் கட்டளை

ஒளி தரும் சூரியனே நில் நில் நில்
ஒளி தரும் சந்திரனே நில் - 2
கிபியோனின் சூரியனே நில் நில் நில்
ஆயலோனின் சந்திரனே நில் - 2
யோசுவாவின் கட்டளைக்கு கீழ்ப்படிந்ததே
சூரியனும் சந்திரனும் தரித்து நின்றதே – 2
முன்னும் பின்னும் இல்லையே
அந்த நாளை ஒத்த நாள் - 2
என்ன அற்புதம் ஆஹா என்ன அற்புதம் – 2


பாடல் 3

காப்பேன் உந்தன் குடும்பத்தை
கர்த்தர் உரைக்கிறார் கேட்டிடு
கொண்டுவா எனக்கு அப்பம் தண்ணீர்
உந்தன் குடும்பம் வாழ்ந்திடும்
கொண்டுவா எனக்கு அப்பம் தண்ணீர்
உரைத்தான் தீர்க்கன் எலியாவும்
கீழ்ப்படிந்தாள் சாரிபாத் விதவை
காப்பாற்றப்பட்டாள் பஞ்சத்திலே
கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்தால்
அழிவுக்கு காப்பாற்றுவார் உன்னையும் – 2


பாடல் 4

1.   வண்ணத்துப்பூச்சியாய் நானிருந்தால்
இறக்கைக்காக உம்மைத் துதிப்பேன்
சின்னஞ்சிட்டாய் நான் இருந்தால்
பாட்டுப்பாடி உம்மைத் துதிப்பேன்
நீந்தும் மீனாய் நானிருந்தால்
வாலை ஆட்டி உம்மைத் துதிப்பேன்
துதிப்பேன் தினமே என்னையும் படைத்ததினால்  ஓர் உள்ளம் தந்தீர்

ஓர் உள்ளம் தந்தீர் மகிழ்ச்சி தந்தீர்
ஏசுவை தந்து உந்தன் சொந்தமாக்கினீர்
துதிப்பேன் தினமே என்னையும் படைத்ததினால்

2.   பெரிய யானையாய் நான் இருந்தால்
தும்பிக்கையை உயர்த்தி உம்மைத் துதிப்பேன்
கங்காருவைப் போல் நான் இருந்தால்
குதித்து குதித்து உம்மைத் துதிப்பேன்
கருமை கரடி ஆனாலும்
காக்கும் கர்த்தரை நான் துதிப்பேன்
துதிப்பேன் தினமே என்னையும் படைத்ததினால்  ஓர் உள்ளம் தந்தீர்

3.   ஊர்ந்து செல்லும் புழுவானாலும்
நெழிந்து நெழிந்து உம்மைத் துதிப்பேன்
பெரிய முதலையாய் நானிருந்தால்
சிரிப்பால் உம்மைத் துதித்திடுவேன்
மயிலைப் போல நானிருந்தால்
தோகையை விரித்து உம்மைத் துதிப்பேன்
துதிப்பேன் தினமே என்னையும் படைத்ததினால்  -   ஓர் உள்ளம் தந்தீர்

பாடல் 5
எக்காள தொனி முழங்குது பார் பிப்பீப்பிப்பீபீ
எரிகோ கோட்டை சரியுது பார் மடமடவென்று - 2
ஆறு நாளிலும் சுற்றி வந்தார்கள்
ஏழாம் நாள் ஏழு முறை சுற்றி வந்தார்கள் - 2
விழுந்தது கோட்டை யோசுவா மகிழ - 2
இஸ்ரவேலர் ஜெயமடைந்தார்கள்எக்காள

விசுவாசத்தோடு கீழ்ப்படிந்ததால்
வெற்றியை அடைந்திட்டார் இஸ்ரவேலர்கள் - 2
தம்பித் தங்கையே இயேசுவை நம்பி – 2
விசுவாசத்தால் வெற்றி பெற்றிடுஆமா ஆமா  -  எக்காள

பாடல் 6
பிப்பிப்பி பிப்பிப்பி குழலோசை
டும்டும்டும் டும்டும்டும் மேள ஓசை – 2
ஆடல் பாடல் எல்லாம் நிறைந்த பெரிய விருந்தாம்
அகாஸ்வேரு ராஜா புகழ்பெற்ற விருந்தாம் – 2

1.   யாவரும் ராஜாவை புகழ்ந்து போற்றினர்
ராஜ்ஜியத்தின் மேன்மையை வியந்து நின்றனர் - 2
பெருமையோடு ராஜா இருந்த அந்த விருந்திலே
கடவுளுக்கு இடம் தான் கொஞ்சமும் இல்லை - 2
2.   பணம் படிப்பு புகழ் நிறைந்த அன்பு தம்பியே
இயேசு இல்லா இவை யாவும் வெறும் புழுதியே -2
இயேசுவே உன் காரியத்தின் நாயகன் ஆனால்
நீ எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வெற்றியே – 2
பிப்பீப்பி வெற்றி வெற்றி
டும் டும் டும் வெற்றி வெற்றி
பிப்பீப்பி டும் டும் டும் வெற்றி வெற்றியே – 2

பாடல் 7
பண்டிகையாம் பண்டிகை மகிழ்ச்சி பொங்கும் பண்டிகை
பகை ஒழித்து விடுதலையை தந்த பண்டிகை - 2

1.   சின்ன தம்பி கேளு தங்கை கேளு மகிழ்ச்சியிலே துள்ளி பாடி
யூதரெல்லாம் மீட்கப்பட்ட பூரீம் பண்டிகை - 2

2.   பகைவனான சாத்தானையே படுகுழியில் தள்ளினாரே
பகை ஒளித்து சிலுவையிலே வெற்றி தந்தாரே – 2

3.   நீயும் மகிழ்வோடு நம்மை மீட்டு பரனோடு வாழ்ந்திடவே
செய்ததாலே கொண்டாடுவோம் நம் பண்டிகைஇன்று – 2    -   பண்டிகையாம்

பாடல் 8
1.   சந்தோஷம் இருந்தால் கைத்தட்டு – 2
சந்தோஷம் இருந்தால் உண்மையாய் இருந்தால்
சந்தோஷம் இருந்தால் கைத்தட்டு  

2.   சந்தோஷம் இருந்தால் கைநொடி – 2
சந்தோஷம் இருந்தால் உண்மையாய் இருந்தால்
சந்தோஷம் இருந்தால் கைநொடி

3.   சந்தோஷம் இருந்தால் மூன்றும் செய் – 2
சந்தோஷம் இருந்தால் உண்மையாய் இருந்தால்
சந்தோஷம் இருந்தால் மூன்றும் செய்         

4.   சந்தோஷம் இருந்தால் ஆமென் சொல்ஆமென் – 2
சந்தோஷம் இருந்தால் உண்மையாய் இருந்தால்
சந்தோஷம் இருந்தால் ஆமென் சொல்         - ஆமென்
                 
பாடல் 9
இயேசு ராஜா எனக்குத் தெரியும்
நீர் என்னை நேசிக்கிறீர்
இயேசு ராஜா எனக்குத் தெரியும்
நீர்  என்னை விரும்புகிறீர்

1.   சொல்லும் கர்த்தாவே உம் வேலையை செய்திடுவேன்
நீர் வனையும் பாத்திரமாக என்னை பயன்படுத்தும்
பேசும் கர்த்தாவே என்னோடு என்றென்றும்
மெல்லிய சத்தம் கேட்டிட நானும் ஆசை கொள்ளுகிறேன்  -  இயேசு ராஜா

2.   தோன்றும் கர்த்தாவே என் கண்கள் கண்டிடுமே
தரிசனம் காண தினமும் நானும் காத்திருக்கிறேன்
வருவேன் கர்த்தாவே உம் வருகை நாளினிலே
அருகினில் நின்று அல்லேலுயா பாட்டுப் பாடிடுவேன்  -  இயேசு ராஜா

பாடல் 10
ஒரு சின்ன பையன் நான் , அட சுட்டி பையன் நான்
சாத்தானுக்கு அடிமையாயிருந்தேன்
தேவன் என்னைக் கண்டு , ஓடி ஓடி வந்து -2
தோளில் என்னைச் சுமந்து கொண்டாரே
நான் பாடுகிறேன் வீணை மீட்டுகிறேன் – 2
என் இயேசு என் சொந்தமானாரே
என் தேவன் என் தந்தை ஆனாரே - 2

பாடல் 11
1.   குடு குடு தத்தா நோவா தாத்தா
கிடு கிடு என்று பேழை செய்தார் -2
உத்தமமாய்  அவர் கீழ்ப்படிந்தார்
முறைப்படி பேழைக்குள் நுழைந்திட்டார் – 2
2.   சட சடவென்று மழையும் பெய்தது
கட கடவென்று நீர் உயர்ந்ததே - 2
கீழ்ப்படிந்தோரே மீட்கப்பட்டார்
கீழ்ப்படியாதோர் மடிந்து போனார் – 2
சின்ன தம்பி சின்ன தங்கை கீழ்ப்படி
இரட்சிப்பின் பேழைக்குள் நுழைந்திடுவாய் – 2

பாடல் 12
இயேசு அற்புதமானவரே 2
என்னை மீட்டென்னை காத்தென்னை தாங்குகிறார்
அவர் அற்புதமானவரே

1.   இயேசு உன்னதரென்றனரே 2
விண் சூரிய சந்திர நட்சத்ரங்கள்
அவர் உன்னதரென்றனரே

2.   இயேசு அற்புதமானவரே - 2
இயேசு காற்றையும் கடலையும் அதட்டினாரே
இயேசு அற்புதமானவரே

பாடல் 13
1.   சின்னஞ்சிறு வயதினிலே இயேசு என்னைக் கண்டாரே
நன்றி சொல்லி நான் எல்லாம் விண்
நேசரையே போற்றிடுவேன் - 2
உள்ளத்திலே சந்தோஷம்
பொங்கிடுதே சங்கீதம் தகதிமி தாளம் போட்டு
பாடுவேன் புது பாடல்கள் – 2

2.   காலை மாலை வேளையெல்லாம்
யேசுவோடு பேசுவேன்
தேவன் தந்த ஞானப்பாலை
பருகி தினம் மகிழுவேன் – 2
ஞானத்திலும் வளர்த்தியிலும்
தயவிலும் கிருபையிலும்
இயேசுவுக்குள் வளர்ந்து பெருகி
உலகிற்கு வழி காட்டுவேன் – 2
லலலலா லாலலலா லால்லலல லல்லாலா – 3

பாடல் 13
எந்தன் ஜனத்தின் அழிவை
நான் எப்படி பார்ப்பேனே – 2
ஆமான் என்ன எழுதினானோ
அதை மாற்றி எழுதும் எந்தன் ராஜாவே – 2
எஸ்தரின் வேண்டுதல் கேட்டு
எழுதிய தீர்ப்பு மாறியதே - 2
என்றும் இயேசு மீட்பர்  இங்கே – 2
சாத்தானின் தீர்ப்பை மாற்றி எழுதிடுவார்
நீ என்றும் ஆசிர்வாதம் பெற்றிடுவாய். -2

பாடல் 14
விசுவாசம் வேணும் நல்ல விசுவாசம் வேணும்
பேச்சில மூச்சில வாழ்க்கையில யாவுமே
விசுவாசம் வேணும் , விசுவாசம் வேணும்

1.   ஆபேலின் பலியே விசுவாசம்
ஏனோக்கின் வாழ்வே விசுவாசம்
நோவா தாத்தா பேழையை கட்டி
தப்பி பிழைத்ததே விசுவாசம்
ஆண்டவர் சொன்ன வார்த்தையை நம்பி
ஆபிரகாம் கொண்ட விசுவாசம் – 2    -  விசுவாசம் வேணும்

2.   சாராளின் வாழ்க்கையிலே விசுவாசம்
ஈசாக்கை பெற்ற நல் விசுவாசம்
ஈசாக்கை மலையில் பலிசெலுத்திட
ஆபிரகாம் கொண்ட விசுவாசம்
யாக்கோபு ஏசாவை ஆசீர்வதித்திட
ஈசாக்கு கொண்ட விசுவாசம் - விசுவாசம் வேணும்

3.   யாக்கோபின் மரணத்தில் விசுவாசம்
மோசேயும் வளர்ந்தது விசுவாசம்
எரிகோ கோட்டை சுற்றி நடந்து
எகிப்தை ஜெயித்தது விசுவாசம்
காடு மலையும் கடல் கடந்து
கானானை கொண்டது விசுவாசம் - விசுவாசம் வேணும்

பாடல் 15
பாலர் ஞாயிறிது பாசமாய் வாரும்
பாடி இயேசு நாமம் பணிந்து போற்றும்

1.   தாலந்தைப் புதைத்திடாமல் தாமதமே பண்ணிடாமல்
ஞாலமீதிறங்கி வந்த சுவாமி இயேசு அன்பை எண்ணி -      பாலர் ஞாயிறிது

2.   பாலர் சங்கத்தாலே மாட்சிமைப் பெற்றோம்
பாலர் நேசர் பாதம் பணியக் கற்றோம்
பாரில் ஜோதி வீசுகின்ற பரிசுத்த வேதம் கற்றோம்
ஊரில் எங்கும் நம் பஞ்சாங்கம்
ஓதும் பாலியர் நேசர் கண்டோம் - பாலர் ஞாயிறிது

3.   தேடி வந்தடையும் தேசிகருண்டு
பாடி ஆனந்திக்க பாலர் பாட்டுண்டு
கூடி வந்து ஆனந்திக்கக் கூட்டப் பண்டிகையுமுண்டு
நாடி மீட்பர் பாதம் பாலர் தேட எல்லா ஏதுமுண்டு - பாலர் ஞாயிறிது

4.   இன்று மட்டும் நம்மை ஏந்திக் கொண்டாரே
இன்னும் நித்தியமும் பாதுகாப்பாரே
அன்பின் சங்கம் இதைக்கொண்டு
ஆத்ம நேசர் செய்து வரும்
எண்ணி முடியா நன்மையை

ஏகமாக எண்ணி கொண்டு - பாலர் ஞாயிறிது

0 comments:

Post a Comment