Saturday, 20 August 2016

4. தென்கொரியாவில் சிறு ஆலயம்

4. தென்கொரியாவில் சிறு ஆலயம்


தென்கொரியாவில் ஒரு சிறு ஆலயம் இருந்தது. அது மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததால் ஆலையத்தின் போதகர் ஆலையத்தை பழுது பார்க்க பொருளுதவி தரும்படி சபையாரை கேட்டுக்கொண்டார்.

அந்த ஆலையத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தார். அவருக்கு தேவனுடைய ஆலையத்தின் மேல் அளவற்ற அன்பும் வாஞ்சையும் இருந்தது. ஆனால் கையில் பணமில்லை எனவே தன் கண்களில் ஒன்றை மருத்துவமனைக்கு சென்று விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை ஆலைய கட்டிட நன்கொடை நிதியாக கொடுக்க தீர்மானித்தார்.

        அதற்க்காக அவர் முதலில் ஒற்றைக் கண்ணோடு வாழப் பழகினார். ஒரு துணியால் ஒரு கண்ணை மூடி மறு கண்ணால் வேலைச் செய்ய ஆரம்பித்தார். சில வாரங்கள் கழித்து தன்னால் வேலை செய்ய முடியும் என்று அறிந்த பிறகு மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் தன் கண்ணை எடுத்து அதற்க்கு பதிலாக பணம் தரும்படி கேட்டார்.

மருத்துவர்கள் ஏன் என்று கேட்டப்போது அந்த விசுவாசி தன் ஆலையத்தின் பளுதடைந்த நிலையை கண்ணீரோடு விளக்கி சொன்னார்மருத்துவர்களின் உள்ளம் கரைந்தது. அவரது கண்ணை எடுக்க விரும்பாத மருத்துவர் தானே ஒரு பெரும் தொகையை நன்கொடையாக கொடுத்தார். இதை மற்ற விசுவாசிகள் கேள்விப் பட்டு மிகவும் தியாகமாக தங்களுக்குள்ள எல்லாவற்றையும் ஊழியத்துக்காக அற்ப்பணித்தனர்.


எழுப்புதலைப் பற்றி பேச ஆயிரம் பேருண்டு

ஆனால் எழுப்புதலின் கிரயம் செலுத்த முன் வருவோர் யார்?

கல்வாரி அன்பைப் பற்றி பேச ஆட்களுண்டு

ஆனால் கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட முன்வருபவர் எத்தனைபேர்?



தேவப் பிள்ளைகளே எழுப்புதலின் கிரயம் நாம் தான் நமக்காக கிறிஸ்து இரத்தத்தையெல்லாம் ஊற்றிக் கொடுத்தாரே அந்த தியாகத்திற்குத் தகுதியான தியாகத்தோடு வாழ்வோமா.

0 comments:

Post a Comment