1.
லூட்விக்
நோம்மென்ஸன்
20 வயது லூட்விக் கால் உடைந்த நிலையில் படுக்கையில் படுத்திருந்தார்
மேற்க்கொண்ட வசனத்தை மீண்டும் மீண்டும் படித்தார் மிகவும் சோகமான நிலையில்
தன் தாயை அழைத்தார்.
அம்மா நான் மீண்டும் நடக்க முடியுமா ஆண்டவர் என் தேவையை சந்திப்பாரா நான் கேட்கும் உதவியை அவர் செய்வாரா. தாய் மிகுந்த நம்பிக்கையுடன் தன் மகனின் கரங்களைப பற்றிப் பிடித்து கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்ளச் செய்தார். மூன்று வருடங்கள் கடந்தன. ஒருநாள் தன் படுக்கையை விட்டு குதித்து எழுந்தார், நடந்தார், ஓடினார்.
24 வயது இளைஞன்: அவர் கையில் வேதாகமத்துடன் சுமித்திரா தீவை நோக்கி பயணமானார். இதுவரை கிறிஸ்து யார் என்பதையே அறியாத மக்களுக்கு தன் வாழ்வில் நடந்த அற்ப்புதங்களை எடுத்துக் கூற மாபெரும் மிஷ்னரியாக சென்றார்.
"பேபாக்" என்ற மக்கள் கூட்டம். பல இடையுறுகளின் மத்தியில் பொறுமையாய் அவர்களுக்கு கிறிஸ்துவைப் பிறசங்கித்தார். அவர்கள் மொழியிலேயே வேதாகமத்தை மொழிபெயர்க்க ஆரம்பித்தார்.
1862ல் ஊழியத்தை ஆரம்பித்த அவர் 1876ஆம் ஆண்டு 2000 ஆத்துமாக்களை ஆதாயம் செய்தார். 1878ஆம் ஆண்டு புதிய ஏர்ப்பாட்டை 'பேபாக்' மொழியில் வெளியிட்டார். பெரும் புதயலை பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியில் மக்கள் அனுதினமும் கிறிஸ்துவுக்குள் வளர ஆரம்பித்தனர். மக்களுடைய கலாச்சாரத்தை மாற்றாமல் மக்களோடு மக்களாக பணிசெய்த நோம்மென்ஸன் 1918ஆம் ஆண்டு இளைப்பாறுதலு-க்குள் பிரவேசித்தப்போது 1,80,000 ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டிருந்தனர். தற்ப்போது இந்தோனேஷியாவின் மாபெரும் கிறிஸ்தவ மக்கள் தொகை கொண்ட இடம் சுமத்திரா தீவே ஆகும். லூட்விக் நோம்மென்ஸன் அவர்களின் கனவு நினவானது. இறை சித்தம் நிறைவேறியது.
மண்ணில் :
06.02.1834
விண்ணில் :
23.05.1918
ஊர் :
நார்ட்ஸ்டரான்ட்பெனின்சுலா, டென்மார்க்
தரிசன பூமி :
சுமித்ரா தீவு
0 comments:
Post a Comment