Saturday, 23 July 2016

2.ஜான் டக்கர்

2.ஜான் டக்கர்





                
       கிறிஸ்தவ மிஷனரியாக தென் தமிழகத்துக்கு சுமார் 115வருடங்களுக்கு முன்பு அவர் பாளையங்கோட்டை பகுதியில் இருந்தபோது இங்குள்ள நிலைமைகளை பார்த்து விட்டு இங்கிலாந்து நாட்டில் உள்ள தனது சகோதரி சாராள் டக்கருக்கு எழுதிய கடிதத்தில் "இந்த தேசத்தில் உள்ள பெண்கள் பள்ளிக்கூடமே போவதில்லையாம். படிக்கவே மாட்டார்களாம். ஆண்கள் சிலர் மட்டுமே படிக்கிறார்கள்..வேற்று ஆண்களை பார்த்தால் பெண்கள் வீட்டில் உள்ளே சென்று கதவை பூட்டி கொள்கிறார்கள். ஆச்சரியமாக உள்ளது "என குறிப்பிட்டு உள்ளார்”.

                சாராள் டக்கர் ஒரு மாற்று திறனாளி கைகள் ஊனமுற்றவர் பள்ளியில் படிக்கும் மாணவி வயது 14 கடிதத்தை படித்தவுடன் சாராள் டக்கர் தன்னுடைய 100 பவுன் நகைகளுடன், தன்னுடன் படிக்கும் சக மாணவிகளிடம் சுமார் 200 பவுன் வசூலித்து தனது அண்ணன் ஜான் டக்கருக்கு அனுப்பி வைத்து உடனடியாக பெண்கள் கல்வி பயில ஒரு பள்ளியையும் ஆசிரிய பணி புரிய ஆசிரிய பயிற்சி கல்வி நிறுவனம் ஒன்றை நிறுவவும் கேட்டு கொண்டாள்.

                     115 வருடங்களுக்கு முன்னால் அப்படி உருவான கல்வி நிறுவனம் தான் பாளையங்கோட்டையில் பிரசித்தி பெற்ற சாராள் டக்கர் பள்ளி மற்றும் சாராள் டக்கர் மகளிர் கல்லூரி. லட்சக்கணக்கான பெண்களுக்கு அறிவொளி ஏற்றிய சாராள் டக்கர் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவே இல்லை. இந்தியாவுக்கு வந்ததும் இல்லை.

                அமெரிக்காவில் leading consultant ஆக பணி புரியும் எழுத்தாளர் காஞ்சனா-தாமோதரன் போன்ற அறிவாளிகளை உருவாக்கிய இந்த நிறுவனத்தின் பெயரை வெறுமனே "நான் STC மாணவி" என்று பெயர் சுருக்கி அழைப்பது தான் வேதனையிலும் வேதனை.

                பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து நம் தேசத்து பெண் மக்கள் கல்வி பயில நகைகளை அனுப்பி வாழ்வை தியாகம் செய்த சாராள் டக்கர் என்ற பெண்மணியை பெருமையுடன் போற்றுவோம்

0 comments:

Post a Comment