Proverbs 3:5-6

5. Trust in the LORD with all your heart and lean not on your own understanding;
6. In all your ways submit to him, and he will make your paths straight.

John 14:27

Peace I leave with you; my peace I give you. I do not give to you as the world gives. Do not let your hearts be troubled and do not be afraid.

Psalm 55:22

Cast your cares on the LORDand he will sustain you; he will never let the righteous be shaken.

Psalm 119:114-115

114. You are my refuge and my shield; I have put my hope in your word. 115. Away from me, you evildoers, that I may keep the commands of my God!

2 Timothy 1:7

For the Spirit God gave us does not make us timid, but gives us power, love and self-discipline.

Jesus is our Saviour.

Jesus was right and front of me. I know Jesus is the Christ because he gave up his life up for us

Jesus' has been raised and his instructions to his apostles

He was born that he would be the one to save all mandkind.

Saturday, 20 August 2016

4. தென்கொரியாவில் சிறு ஆலயம்

4. தென்கொரியாவில் சிறு ஆலயம்


தென்கொரியாவில் ஒரு சிறு ஆலயம் இருந்தது. அது மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததால் ஆலையத்தின் போதகர் ஆலையத்தை பழுது பார்க்க பொருளுதவி தரும்படி சபையாரை கேட்டுக்கொண்டார்.

அந்த ஆலையத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தார். அவருக்கு தேவனுடைய ஆலையத்தின் மேல் அளவற்ற அன்பும் வாஞ்சையும் இருந்தது. ஆனால் கையில் பணமில்லை எனவே தன் கண்களில் ஒன்றை மருத்துவமனைக்கு சென்று விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை ஆலைய கட்டிட நன்கொடை நிதியாக கொடுக்க தீர்மானித்தார்.

        அதற்க்காக அவர் முதலில் ஒற்றைக் கண்ணோடு வாழப் பழகினார். ஒரு துணியால் ஒரு கண்ணை மூடி மறு கண்ணால் வேலைச் செய்ய ஆரம்பித்தார். சில வாரங்கள் கழித்து தன்னால் வேலை செய்ய முடியும் என்று அறிந்த பிறகு மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் தன் கண்ணை எடுத்து அதற்க்கு பதிலாக பணம் தரும்படி கேட்டார்.

மருத்துவர்கள் ஏன் என்று கேட்டப்போது அந்த விசுவாசி தன் ஆலையத்தின் பளுதடைந்த நிலையை கண்ணீரோடு விளக்கி சொன்னார்மருத்துவர்களின் உள்ளம் கரைந்தது. அவரது கண்ணை எடுக்க விரும்பாத மருத்துவர் தானே ஒரு பெரும் தொகையை நன்கொடையாக கொடுத்தார். இதை மற்ற விசுவாசிகள் கேள்விப் பட்டு மிகவும் தியாகமாக தங்களுக்குள்ள எல்லாவற்றையும் ஊழியத்துக்காக அற்ப்பணித்தனர்.


எழுப்புதலைப் பற்றி பேச ஆயிரம் பேருண்டு

ஆனால் எழுப்புதலின் கிரயம் செலுத்த முன் வருவோர் யார்?

கல்வாரி அன்பைப் பற்றி பேச ஆட்களுண்டு

ஆனால் கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட முன்வருபவர் எத்தனைபேர்?



தேவப் பிள்ளைகளே எழுப்புதலின் கிரயம் நாம் தான் நமக்காக கிறிஸ்து இரத்தத்தையெல்லாம் ஊற்றிக் கொடுத்தாரே அந்த தியாகத்திற்குத் தகுதியான தியாகத்தோடு வாழ்வோமா.

6. SAVARIRAYAN JESUDASAN



Friday, 19 August 2016

5. Mother Teresa


5. Mother Teresa



Thursday, 18 August 2016

3. பாவங்களை சுத்திகரிக்கும் இரத்தம்

3. பாவங்களை சுத்திகரிக்கும் இரத்தம்


            D.L மூடி என்ற தேவ மனிதர் ஒரு கூட்டத்தில் பிரசங்கித்த பொழுது அநேகர் தங்கள் பாவத்தை அறிக்கையிட்டு மனம் திரும்பினார்கள். கூட்டம் முடிந்தவுடன் ஒரு முரட்டு மனிதன் மூடியின் கரத்தைப் பிடித்துக்கொண்டு, “மூடி நீ என்னோடு வாஎன்றான். மூடியை அந்த கூட்டத்திற்கு அழைத்திருந்த போதகர் மூடியிடம், “ஐயா,  அவன் ஒரு கொலை காரன். நீங்கள் அவனோடு போகவேண்டாம்என்றார். பிரசங்கத்தை முடித்திருந்த மூடிக்கு ஆவிக்குரிய தைரியம் ஏற்ப்பட்டது. அந்த முரட்டு மனிதனுடன் காரில் ஏறினார். கார் பட்டணத்தைக் கடந்து காட்டுப் பாதையில் சென்றது. மூடி காருக்குள் அமைதியாக ஜெபித்துக் கொண்டிருந்தார். கார் ஒரு பாழடைந்த பங்களாவில் சென்று நின்றது. முரட்டு மனிதன் மூடியை இறங்கச் சொன்னான். பங்களாவிற்குள் இருவரும் சென்றார்கள்.

            ஒரு அறையைத் திறந்தான் முரடன். உள்ளே மதுபாட்டில்கள் குவிந்து கிடந்தன. முரடன் மூடியைப் பார்த்து, “இவைகளையெல்லாம் இயேசு மன்னிப்பாரா?” என்று கேட்டான். மூடி சமாதானமாய் அவனிடம்இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும் (I யோவான் 1: 7)” என்றார். அடுத்த அறை முழுவதும் எலும்பு கூடுகளால் நிறைந்திருந்தன. முரடன் மூடியைப் பார்த்து, “இவைகளெல்லாம் நான் கொன்றவர்கள். இயேசு இதையும் மன்னிப்பாரா?” என்று   கேட்டான். மூடி சமாதானமாய் அவனிடம்இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல   பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்என்றார். அடுத்த அறையில் தான் கொள்ளையடித்த அனைத்து தங்கம், வெள்ளி போன்ற பொருட்களையும் காண்பித்து, “இயேசு இதையும் மன்னிப்பாரா?” என்று கேட்டான். மீண்டும் மூடி சமாதானமாய்   அவனிடம்இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச்  சுத்திகரிக்கும்என்றார்.

            அதன் பிறகு மலை அடிவாரத்திற்கு மூடியை அழைத்துச் சென்றான் முரடன். அங்கே ஒரு சிறிய குடிசை இருந்தது. முரடனின் மனைவி நோய்வாய்ப்பட்டு அந்த கட்டிலில் படுத்திருந்தாள். அருகில் அவனது 12 வயது மகள் முகத்தில் தீக்காயங்களுடன் அழுதுகொண்டிருந்தாள். முரடன் மூடியைப் பார்த்து, “இவள் என் மனைவி. குடித்து விட்டு தினமும் இவளை நான் சித்திரவதை செய்வேன். நேற்று இவளை அடித்த பொழுது என் மகள் தடுத்தாள். அவளைத் தள்ளிய பொழுது, அவள்    விளக்கில் விழுந்ததால் அவளுடைய முகம் கருகிற்று. உன் ஆண்டவராகிய இயேசு    கிறிஸ்து, என்னைப் போன்ற கொடூர குணமுள்ள மனிதனை மன்னிப்பாரா?” என்று கேட்டான். மூடி மீண்டும் மௌவுனமாக அவனிடம், “நீ பாவங்களை விட்டு  மனம்திரும்பி இயேசுவிடம் வரும்பொழுது, இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, உன்னைச் சுத்திகரிக்கும்என்றார்.


            உடனே மூடியின் கால்களைப் பிடித்துக் கொண்டு அழுதான் முரடன். கர்த்தாவே என்னை மன்னித்தருளும், ஆண்டவரே என்னை மன்னித்தருளும் என்று  கதறி அழுதான். அன்றைக்கு அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு, பரலோகத்தின் பிரஜை ஆனான். இதை வாசிக்கின்ற இயேசுவுக்கு பிரியமானவர்களே, நீங்கள்  இரட்சிக்கப்பட்டு சபைக்கு சென்று, ஞானஸ்நானம் பெற்று பின்மாறிப்போயிருக்கலாம். பாவ வாழ்க்கையை விடுவதற்கு கடுமையாக போராடிக் கொண்டிருக்கலாம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கரம் இன்றைக்கு உங்களை நோக்கி திறந்திருகின்றது. இயேசுவிடம் வாருங்கள். அவருடைய இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, உங்களை சுத்திகரிக்கும்.