2. தகப்பனின் அன்பு
அமெரிக்காவில்
சாமுவேல் என்பவர் தனது மனைவி மற்றும் மகன் அர்னால்டுடன் வாழ்ந்து வந்தார். 1988-ம் வருடம் டிசம்பர்
7ம் தேதி வட மெரிக்காவை புரட்டிபோடக்
காத்திருந்தது ஒரு வலிமையான நிலநடுக்கம். அன்றைய பள்ளிக்கு செல்லவிருந்த அர்னால்டை கட்டித்தழுவி, “இந்த நாள் நல்ல நாளாக அமையட்டும். எந்த சூழ்நிலையிலும் உனக்காக நான் இருப்பேன்” என்று சொல்லி அனுப்பி வைத்தார். முற்ப்பகல் 11 மணிக்கு 25,000 க்கும் அதிகமான நபர்களை விழுங்கிய அந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டது. அர்னால்டு படித்துவந்த பள்ளிக் கட்டிடம் முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்தது.
அர்னால்டு தனது சக மாணவர்களுடன் கட்டிட
இடிபாடுகளுக்குள் உயிருடன் சிக்கிக்கொண்டான்.
இடிந்தும் புதைந்தும் கிடந்த கட்டிடத்திற்குள் யாரும் உயிர் பிழைத்திருக்க முடியாது என்று எல்லா மாணவர்களின் பெற்றோர்களும் எண்ணினார்கள். ஆனால் அர்னால்டின் தகப்பன் சாமுவேலோ, கட்டிட இடிபாடுகளுக்குள் இருக்கும் தனது மகனை கண்ணீருடன் தேடத்துவங்கினார். கற்களையும் இரும்புக் கம்பிகளையும் கைகளால் அகற்றுவதைப் பார்த்த அநேகர், அவரைப் பரிகசித்தனர்.
அல்லும் பகலுமாக கட்டிட இடிப்பாடுகளை அகற்றிக்கொண்டே இருந்தார் சாமுவேல். சிறுவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மலர்வளையங்களை
வைக்க துவக்கினர். சாமுவேலோ மனம் தளராது தோண்டிக்கொண்டே இருந்தார். மூன்றாவது ஒரு பெரிய தூணை அகற்றிய பின்பு, காபாற்றுங்கள்.. காபாற்றுங்கள்.. என்ற மெல்லிய முனங்கல் சத்தத்தைக் கேட்டார் சாமுவேல். அது தனது மகன் அர்னால்டின் குரல் என்பதை அறிந்து கொண்ட அவர் வேகமாக கற்களை அகற்றினார். இறுதியில் கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்த தனது மகனைப் பார்த்து, “வெளியில் வா அன்பு மகனே”என்றார் சாமுவேல். அதற்க்கு அர்னால்டு, “அப்பா, நீங்கள் எப்படியும் என்னைத் தேடி கண்டுபிடித்து காப்பாற்றுவீர்கள் என்பதை அறிவேன். முதலில் மயங்கிய நிலையில் இருக்கும் எனது சகமாணவர்களை காப்பாற்றுங்கள்” என்றான்.
எல்லா மாணவர்களும் பத்திரமாக மீட்கப்பட்ட பின்பு இறுதியில் அர்னால்டு தனது தகப்பன் கைகளைப் பிடித்து வெளியேறினான். “அப்பா, நீங்கள் எந்த சூழ்நிலையிலும் எனக்காக வருவீர்கள் என்று எனது சக மாணவர்களிடம் கூறியிருந்தேன்.
நீங்கள் சொன்ன படியே எனக்காக வந்து விட்டீர்கள்” என்று தனது தகப்பன்
கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான் அர்னால்டு. சாமுவேல் என்ற ஒரு தகப்பனின் முயற்சியால் அன்றைக்கு 14 குழந்தைகள் காப்பாற்றப்பட்டார்கள்.
தேவன் நம்மேல் அன்புகூருவது நாம் செய்கிற நல்ல காரியங்களுக்காகவோ, அவருக்காக நாம் படுகிற பாடுகளுக்காகவோ அல்ல, நாம் அவருடைய பிள்ளைகளாய் இருப்பதினால் மாத்திரமே அவர் நம்மேல் அன்பு கூறுகிறார். “கிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்”
(யோவான் 1:12) என்று வேதம் நமக்கு கூறுகிறது. ஒரு உலக தகப்பன் தனது
மகனுக்காக தனது
உயிரை பணயம் வைத்து மீட்கையில் நம் பரம தகப்பன் இயேசு கிறிஸ்து நம்மை மீட்பதும் நமக்காக எல்லா சூழ்நிலையிலும் நம்மோடிருப்பதும்
எவ்வளவு நிச்சயம்.
0 comments:
Post a Comment