Friday, 5 August 2016

Sunday School Songs

Sunday School Songs


பாடல் 1


கண்ண பறிக்கும் வண்ண விளக்குகள்
கரண்ட்டு போனா அணைஞ்சிடும்

மின்னி துலங்கும் நட்சத்திரங்கள்
மேகம் வந்தா மறைஞ்சிடும்

சந்திர ஒளியும் மங்கிடும்
சூரியனுமே இருண்டிடும்

கர்த்தரே நமக்கு நித்திய வெளிச்சம்
காலமெல்லாம் நடத்துவார்


பாடல் 2

   கோழி தன் குஞ்சுகளைக் கூட்டிச் சேர்ப்பது போல – 2
   கூவி அழைக்கிறாரே ஜீவன் தந்த ரட்சகர் – 2

1 சாக்குப் போக்குச் சொல்லாமல் ஜல்தியாய் ஓடி வந்து – 2
  காக்கும் செட்டைகளின் கீழ் கண்டடைவாய் ரட்சிப்பை – 2

2 தினமும் ஜெபிப்பதாலும் வேதம் வாசிப்பதாலும் – 2
  திட்டமாய் இயேசு நாதர் செட்டைகளின் கீழ் இருப்பாய் – 2


பாடல் 3

   பாக்கியவான் யாரு ? உலகில் பாக்கியவான் யாரு? – 2

1 நடப்பவனுக்கு சைக்கிள் கிடைச்சா பாக்கியவான் அல்ல
  சைக்கிள் போயி பைக் கிடைச்சாலும் பாக்கியவான் அல்ல
  பைக் போயி காரு கிடைச்சா பாக்கியவான் அல்ல
  கார்-ஐ விட்டு ப்ளேனுல பறந்தாலும் பாக்கியவான் அல்ல


2 உலக செல்வங்கள் ஒருங்கே கெடச்சாலும் பாக்கியவான் அல்ல
  கிறிஸ்துவை காணாமல் விசுவாசிப்பவன், அவனே பாக்கியவான்.
  உலகில் அவனே பாக்கியவான், அவனே பாக்கியவான்-உலகில் - 2


பாடல் 4

ஆச்சரியமான ஒளி, அதிசயமான ஒளி-2

அந்தகாரத்தை நீக்கி, இயேசுவுக்கு சொந்தமான
பரிசுத்தபிள்ளையாக நடத்தும் ஒளி


எழும்பிடு நீ பிரகாசித்திடு
மேன்மையாக உன்னை அவர் உயர்த்திடுவாரே


பாடல் 5

    தப்பு கணக்கு போடாதே தம்பி – நீ
    தப்பி விட முடியாது தங்கை

1 உன் இஷ்டம் போல வாழ்ந்திட்டாலும்—இன்று
  நியாயத்தீர்ப்பு நாளொன்று உண்டு – தப்பு கணக்கு

2 வருங்காலம் அறியாயே தம்பி
  உன் வருங்காலம் அறிவாரே இயேசு
  உன் வாழ்க்கை அவர் கையிலே நம்பி
  கனி தர ஒப்புவிப்பாய் உன்னை - தப்பு கணக்கு


பாடல் 6


Best Bus ஒண்ணு  fast ஆ போகுது
Just நீ நின்னு test பண்ணிக்கோ
கிறிஸ்து இயேசுவின் இரத்தம் உன்னையே
சுத்தம் செய்திடும் Best-ஆய் மாறலாம்
Best-ஆய் மாறலாம் - 3
Worst என்ற நீ Best ஆய் மாறலாம்


பாடல் 7

இயேசு என்னை முற்றிலும் மீட்டார்
சிலுவையில் மாண்டார்
விடுதலை ஈந்தார்
இயேசு என்னை முற்றிலும் மீட்டார்
அல்லேலுயா

நான் ஆடிப்பாடி மகிழ்வேன், என் கர்த்தரை நான் போற்றுவேன் - 2


பாவமன்னிப்பை அடைந்து, மோட்ச பாதை செல்லுவேன்
நான் ஆடிப்பாடி மகிழ்வேன்


பாடல் 8

சொல் சொல் சொல் சுவிசேஷம் சொல்
நில் நில் நில் சாட்சியாக நில்
கொடு கொடு கொடு உனக்குள்ளதைக் கொடு
மக்கதொனியா மக்களைப் போல


பாடல் 9

     ஓ என் இயேசுவின் தோட்டத்திலே
     ஆஹா ஹா ஹா ஆனந்தமே
     அந்த தோட்டத்தின் நடுவினிலே

1 குட்டி பூனை குட்டி பூனை ஆ.ஆ.ஆ
  அங்கும் மியாவ் இங்கும் மியாவ்
  அங்கும் இங்கும் மியாவ் மியாவ்
  விளையாடி மகிழ்ந்தன - ஓ என் இயேசுவின்

2 குட்டி வாத்து குட்டி வாத்து ஆ.ஆ.ஆ
  அங்கும் க்வாக் இங்கும் க்வாக்
  அங்கும் இங்கும் க்வாக் க்வாக்
  விளையாடி மகிழ்ந்தன - ஓ என் இயேசுவின்

3 குட்டி நாய் குட்டி நாய் ஆ.ஆ.ஆ
  அங்கும் லொள் இங்கும் லொள்
  அங்கும் இங்கும் லொள் லொள்
  விளையாடி மகிழ்ந்தன - ஓ என் இயேசுவின்

4 குட்டி தம்பி குட்டி தங்கை ஆ.ஆ.ஆ
  அங்கும் ஜே இங்கும் ஜே
  அங்கும் இங்கும் ஜே ஜே
  விளையாடி மகிழ்ந்தனர் - ஓ என் இயேசுவின்


பாடல் 10

கள்ள சாத்தான் மெள்ள வந்து என்னிடம் கேட்டான்
தம்பி உன்னிடம் நான் தங்கிடவே என்ன கேட்கிறாய்?
உலகின் ராஜா நானே
உள்ளதெல்லாம் தருவேன்
உயர்த்திடுவேன் உன்னை என்றுமே!
என்று கூறி சாத்தான் என்னை ஏமாற்றப் பார்த்தான்
விட்டிடுவேனோ? நான் யேசுவின் பிள்ளை.
அப்பாலே போ சாத்தானே என்று விரட்டினேன்
அப்பா இயேசு ஒருவர் மட்டும் எனக்குப் போதுமே
அழியும் மேன்மை வேண்டாம்
அழிவில்லாத மேன்மை
இயேசு ராஜா எனக்கு தருவாரே - 2


பாடல் 11


Sing unto the lord a new song
Sing unto the lord on the earth
Lord is great, HEY
Greatly to be praised - Sing unto


கர்த்தருக்கு புதுப்பாட்டை பாடு
கர்த்தருக்கு புதுப்பாட்டு
கர்த்தர் பெரியவர், மகிமையுள்ளவர் – 2 - கர்த்தருக்கு புதுப்பாட்டை


பாடல் 12


எண்ணத்தை உண்போம், எண்ணத்தை உடுப்போம்
என்று உங்கள் சரீரத்துக்காக கவலைப்படாதிருங்கள்
நாளைதினம் அடுப்பினிலே போடப்படும் புல்லுக்கு – 2
இவ்விதம் உடுத்துவித்தால் உங்களுக்கும் உடுத்துவிப்பார் – 2


பாடல் 13




குட்டி நானையா, கழுதை குட்டி நானையா

இயேசு ராஜன் ஏறி செல்லும் குட்டி நானையா
இயேசு ராஜன் செல்கையில் ஓசன்னா! ஓசன்னா!
என்ற தொனி கேட்குதே

துள்ளி துள்ளி ஓடி வருவேன் நான்
எந்தன் உள்ளம் பொங்கி மகிழ்வதால்


பாடல் 14

     மாட்டு வண்டியிலே, மாமாவோட மாட்டுவண்டியிலே
     தோட்டம் பக்கம் போனேனே, நோட்டம் விட்டு பார்த்தேனே - 2

1 குண்டு குண்டு கொய்யா கனி,  மல்கோவா மாங்கனி – 2

2 நல்ல கனி , ஆஹா நல்ல கனி !
  மாமா நல்ல கனி என்னில் இல்லையே
  ஆண்டவரிடம் நான் கேட்டேன்
  நல்ல கனி எனக்குத் தந்தார்
  இயேசு ஆவியின் கனி எனக்குத் தந்தார்
  தம்பி நல்ல கனி உனக்குத் தருவார்

  தங்கை ஆவியின் கனி உனக்குத் தருவார்

0 comments:

Post a Comment