உம்மண்டை கர்த்தரே
Nearer my God to Thee
1.உம்மண்டை, கர்த்தரே,
நான் சேரட்டும்;
சிலுவை சுமந்து
நடப்பினும்,
என் ஆவல் என்றுமே
உம்மண்டை, கர்த்தரே,
நான் சேர்வதே.
2.தாசன் யாக்கோபைப் போல்
ராக் காலத்தில்
திக்கற்றுக் கல்லின் மேல்
தூங்குகையில்,
என்தன் கனாவிலே
உம்மண்டை, கர்த்தரே,
இருப்பேனே.
3.நீர் என்னை நடத்தும்
பாதை எல்லாம்
விண் எட்டும் ஏணிபோல்
விளங்குமாம்.
தூதர் அழைப்பாரே
உம்மண்டை, கர்த்தரே,
நான் சேரவே.
4.விழித்து உம்மையே
நான் துதிப்பேன்.
என் துயர்க் கல்லை உம்
வீடாக்குவேன்;
என் துன்பத்தாலுமே
உம்மண்டை, கர்த்தரே,
நான் சேர்வேனே.
‘இதோ,
ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது. அதின்
நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும், இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள்”. ஆதி. 28:12
தன் சகோதரனாகிய ஏசாவுக்குப் பயந்து யாக்கோபு தன் பெற்றோரையும் சுய தேசத்தையும் விட்டுத் தனியானாகத் தப்பி ஓடும்போது, இராக்காலத்தில் பெத்தேலில் ஒரு கல்லைத் தலையணையாகக் கொண்டு தூங்குகையில் கண்ட தரிசனம் நமக்குத் தெரியும். இச்சம்பவத்தை
அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டப் பாடல் இது.
இப்பாடலை எழுதியவர், சாரா பிளவர் ஆடம்ஸ் அம்மையார். ஒருநாள்
இரவு அம்மையார் பெத்தேலில் யாக்கோபு கண்ட கனவைக் கண்டார். எந்தக் கஷ்டமான நிலையிலும் கடவுள் தமது அடியார்களுக்கு அருள்செய்வார் என்னும் உறுதியான நம்பிக்கை அவர்களுக்கு உண்டாயிற்று. விழித்தெழும்பியதும்,
இக்கனவை ஒரு பாடலாக எழுதவேண்டும் என்னும் ஆவல் கொண்டபோது, இப்பாடலின் சில வரிகள் மனதில் உண்டாயின. சில
தினங்களுக்குப் பின், திரித்துவத்தை ஏற்றுக்கொள்ளாத யூனிட்டேரியன் சபையைச் சேர்ந்த உல்லியம் பாக்ஸ் போதகர், தமது சபையில் யாக்கோபைக் குறித்துப் பிரசங்கம் செய்யப்போவதாக அம்மையாரிடம் கூறினார். அவ்வாராதனையில்
பாடுவதற்கு யாக்கோபின் தரிசனத்தைப் பற்றிய பாடல்கள் ஏதாவது உண்டா என அம்மையார் போதகரிடம்
கேட்டார். பாடல்
ஒன்றும் இல்லையெனப் போதகர் கூறவே, ஆடம்ஸ் அம்மையார் உடனே உட்கார்ந்து, ஏற்கெனவே தன் மனதில் உருவான ‘உம்மண்டை கர்த்தரே’ என்னும் பாடலை எழுதி, தன் சகோதரி எலைசாவின் உதவியால் ஓர் இராகத்தையும் அமைத்துக்கொடுத்தார். இது
இப்போது நாம் பாடும் இராகமல்ல. அவ்வாராதனையில்தான்
இப்பாடல் முதல் முறையாகப் பாடப்பட்டது. பின்னர்,
இப்பாடலின் சிறப்பை உணர்ந்த சங்கீத நிபுணரான லவ்வல் மேசன் பண்டிதர், இப்போது நாம் பாடிவரும் ‘Bethany” என்னும் அழகிய இராகத்தை அமைத்தார். இவ்வளவு
துரிதமாக எழுதப்பட்ட இப்பாடலானது, உலக முழுவதிலும் பாராட்டப்படும் என்று அம்மையார் நினைக்கவேயில்லை.
உலகத்திலேயே மிகப்பெரிய கப்பல் என அக்காலத்தில் கருதப்பட்ட,
‘டைட்டானிக்’ என்னும் பிரிட்டிஷ் கப்பல், 1912ம் ஆண்டு ஏப்ரல்
மாதம் இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்குப் பிரயாணம் செய்துகொண்டிருந்தது. கப்பலில் 2000க்கும் அதிகமானபேர் இருந்தனர். ஏப்ரல் 14ம் தேதி நள்ளிரவில்
மிதந்துவந்த ஒரு பனிமலையில் கப்பல் மோதி, உடைந்து அமிழத் தொடங்கியது. பிரயாணிகளில் மூன்றிலொரு பகுதிக்குத்தான் உயிர்மீட்சிப் படகுகள் (Life boats) இருந்தன. ஆயினும்
பிரயாணிகள் கலக்கமடையவில்லை. கப்பலின்
வாத்தியக்குழுவினர்
(Band), ’உம்மண்டை கர்த்தரே’ என்னும் பாடலின் இராகத்தை தொனிக்க, பிரயாணிகள் யாவரும் இப்பாடலை உரத்த சத்தமாய்ப் பாடியவண்ணம் கப்பல் அமிழ்ந்தது. பிரயாணிகளில் சுமார் எழுநூறு பேர் மட்டும் உயிர் தப்பினர்.
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஜனாதிபதியாக இருந்த உல்லியம் மாக்கின்லே என்பவர் இப்பாடலைப் பெரிதும் பாராட்டி, தாம் மரித்தபின் தமது அடக்க ஆராதனையில் இப்பாடல் பாடப்படவேண்டுமென விரும்பினார்.
இப்பாடலை எழுதிய சாரா பிளவர் அம்மையார் இங்கிலாந்தில் ஹார்லோ நகரில் 1805ம் ஆண்டு, பிப்ரவரி
மாதம் 22ம் தேதி பிறந்தார்.
இளவயதிலேயே தாயார் காசநோயினால் இறந்துபோகவே, சாராவும், சகோதரியாகிய எலைசாவும் தந்தையால் வளர்க்கப்பட்டனர். பின்
அம்மையார் லண்டன் மாநகர் சென்று உல்லியம் ஆடம்ஸ் என்னும் சிற்பக்கலை நிபுணரை மணந்து, குடும்ப வாழ்க்கை நடத்தி வந்தார். லண்டன் மாநகரில் ஒரு திறமையுள்ள நடிகையாகவும் இருந்தார். ஆனால் சுகவீனத்தினிமித்தம் நாடக மேடையை விட்டு, இலக்கியம் எழுதுவதை மேற்கொண்டார். பின்னால்,
தந்தையாரும் இறந்துபோகவே, சகோதரியாகிய எலைசாவும், சாராவுடைய வீட்டிலேயே வசித்து வந்தார். 1847ம் ஆண்டு, சாரா
ஆடம்ஸ் அம்மையார் ஆகஸ்டு மாதம், 11ம்தேதி தமது 43வது வயதில் காலமானார்.
சாரா ஆடம்ஸ் அம்மையார் நூற்றுக்கதிகமான பாடல்கள் எழுதியுள்ளார். இப்பாடல்களுக்குச்
சகோதரி எலைசா இராகங்கள் அமைத்து வந்தார். ஆனால், ‘உம்மண்டை கர்த்தரே’ என்னும் ஒரே பாடல்தான் கிறிஸ்தவ உலகில் வெகுவாகப் பாடப்பட்டு வருகிறது. அவரது இதர பாடல்கள் பொதுவாக அமெரிக்காவில், குறிப்பாக யூனிட்டேரின் சபைகளில் பாடப்படுகின்றன.
உம்மண்டை
கர்த்தரே
உம்மண்டை
கர்த்தரே
நான்
சேரட்டும்
சிலுவை
சுமந்து
நடப்பினும்
என்
ஆவல் என்றுமே
உம்மண்டை
கர்த்தரே (2)
நான்
சேர்வதே
21-05-1888 அன்று இங்கிலாந்தில் உள்ள ஜான்ஸ்டன் பட்டணம் மிகுந்த வெள்ளப்பெருக்கால் சூழப்பட்டது. அங்கு ஒரு வண்டி சுழல் நீரில் மூழ்க ஆரம்பித்தது. அவ் வண்டியில் கவிழ்ந்து கிடந்த ஒரு பெட்டிக்குள் ஒரு இளம் பெண் சிக்கிக் கொண்டிருந்தாள். அவள் தூர கிழக்கு நாடுகளுக்கு மிஷ்னரியாகச் செல்ல தன்னை அற்ப்பணித்து அப்பயணத்தை மேற்க்கொண்டவள். கரையில் இருந்து உதவி எதுவும் செய்ய இயலாமல் தவித்த மக்களை அமைதியாகப் பாத்தாள். ஒரு ஜெபம் பண்ணிவிட்டு இப்பாடலை அமைதியாக பாட ஆரம்பித்தாள். கரையில் இருந்த அனைவரும் கண்ணீர் மல்க அவளோடு இப்பாடலில் இணைந்தனர். பாடிக்கொண்டிருக்கும் போதே அவள் ஆண்டவரின் சந்நதியை பொய் சேர்ந்தாள்.
தாசன்
யாக்கோபைப்போல்
ராக்காலத்தில்
திக்கற்று
கல்லின் மேல்
தூங்குகையில்
எந்தன்
கனாவிலே
உம்மண்டை
கர்த்தரே(2)
இருப்பேனே.
1912 ஆம் ஆண்டு
ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் இங்கிலாந்தில் இருந்து உலகிலேயே மிகப் பிரமாண்டமான டைட்டானிக் என்னும் சொகுசு கப்பல் 2000க்கும் பேற்ப்பட்ட பயணிகளுடன் அமெரிக்கா சென்றுக்கொண்டிருந்தது.
தனது முதல் பயணத்திலேயே அட்லாண்டிக் சமுத்திரத்தின் பனிக்கட்டியில் மோதி மூழ்க ஆரம்பித்தது.
உயிர்க் காக்கும் சாதனங்கள் போதுமான அளவு இல்லை. எனவே திகிலோடு மரணத்த்தை எதிர்நோக்கிய இரண்டாயிரத்துக்கும் மேற்ப்பட்ட மக்களின் மன அமைதிக்காக கப்பலின்
இசைக்குழு இப்பாடலை இசைக்க ஆரம்பித்தது. அனைவரும் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து உணர்ச்சி பொங்க இப்பாடலை பாடினர். மூன்று மணி நேரத்துக்குள் அதில்1500 பேர் உறைய வைக்கும் சமுத்திர நீரில் மூழ்கி மரித்தார்கள்.
நீர்
என்னை நடத்தும்
பாதை
எல்லாம்
விண்
எட்டும் ஏணிப்போல்
விளங்குமாம்
தூதர்
அழைப்பாரே
உம்மண்டை
கர்த்தரே (2)
நான்
சேரவே.
அமெரிக்க
ஜனாதிபதி வில்லியம் மெக்கின்லே இதை தனக்கு விருப்பமான பாடல் என்று கூறி வந்தார். 1901- ஆம் ஆண்டு அவர் சுட்டுக் கொல்லப்பட்டப்போது உயிர் பிரியும் முன் முணுமுணுத்து வார்த்தைகள் இப்பாடல்களே. பின்னா இவர் அடக்க ஆராதனையிலும் ஞாபகார்த்த ஆராதனையிலும் அமெரிக்கா முழுவதும் இப்பாடல் பாடப்பட்டது.
விழித்து
உம்மையே
நான்
துதிப்பேன்
என்
துயர்க் கல்லை உம்
வீடாக்குவேன்
என்
துன்பத்திலுமே
உம்மண்டை
கர்த்தரே (2)
நான்
சேர்வேனே.
துயரமான
தருணங்களில் பலதரப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தரப் பாடிய புகழ் பெற்ற இப்பாடலை எழுதியவர் சாரா பிளவ்வர் ஆடம்ஸ் என்ற ஒரு பெண்.
12 ஆண்டுகள்
இப்பாடல் பிரபலம் ஆகாமல் இருந்தது. அமெரிக்க ஆலைய இசைத்தந்தை என்று அழைக்கப்படும் லோவல் மேசன் "பெத்தானி" என்ற மிக அருமையான ராகத்தை இப்பாடலுக்கு அமைத்தார். இந்த ராகம் இப்பாடலை உலகப் புகழ் பெற்ற பாடலாக்கியது. இவர் " என் அருள் நாதா " போன்ற பல பிரபல பாடல்களுக்கு
இசை அமைத்தவர் என்பது குறிப்பிடப்பட்டது.
0 comments:
Post a Comment